இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியதை தொடர்ந்து மீட்கும் பணிகயில் நவீனத் தொழில் நுட்பக் கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மீட்புப்பணிகள் மத்திய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதனை தொடர்ந்து, சுர்ஜித்தை மீட்கத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
Discussion about this post