தேனி அருகே சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனிடையே சுருளி அருவியின் நீர்பிடிப்பு ஆதாரமான, தூவானம் அணையில் இருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கூடுதலாக காணப்படுகிறது. அதேபோல் சுருளி வேலப்பர் கோயில், விபூதி குகை, கைலாசநாதர் குகை, கோடிலிங்கம் கோயில் போன்றவற்றிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
Discussion about this post