ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகளிடம் அடுத்த வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல் புகார்களை ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை செய்து வருகிறார்.
இந்நிலையில் சூரப்பா மீதான புகார் தொடர்பாக சாட்சிகளிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தரப்பு விளக்கங்களை அளிக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பிறகு சூரப்பாவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அப்போது சூரப்பா விளக்கங்களைக் அளிக்கலாம்.
தற்போது ஊழல் புகார் விசாரணை 85 சதவீதம் முடிந்துவிட்டது. கொரோனா என்பதால் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் விரைந்து முடிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.