அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. புகார் தொடர்பான விசாரணையில், சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரங்கள் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சில ஆசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவித்த விசாரணை ஆணையம், பல்கலைக்கழக அலுவலர்களிடம் கூடுதல் ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அவைகள் பெறப்பட்டவுடன் சூரப்பாவிடம் நேரடி விசாரணை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், மேலும் 3 மாதங்கள் விசாரணை ஆணையத்தை நீட்டிக்க முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆணைய தலைவர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post