ஹைட்ரோ கார்பன் திட்டம்: உச்சநீதிமன்றம் அறிவுரை

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி. ஆர். பாண்டியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகலாமே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பி.ஆர்.பாண்டியன் தரப்பு வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, தேசிய அளவிலான திட்டம் என்பதாலும், திட்டம் செயல்படுத்தும் ஆணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுகியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி,  இந்த மனுவில் வலுவான காரணங்கள் உள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்தை முதலில் அணுகுங்கள் என்று அறிவுறுத்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, வழக்கையும் முடித்து வைத்தார்.

Exit mobile version