கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலில் சிக்கி பல லட்சம் மதிப்பிலான தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் நாசமானது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்தநிலையில், புயல் தாக்குதலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் மற்றும் சேதமடைந்த தென்னை மரம் ஒன்றுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்று கலைச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம், புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Discussion about this post