சென்னை தி.நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் மாணவிகளின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக கல்லூரி நிர்வாகம் ஆண்டுதோறும் பஜார் என்று சொல்லக்கூடிய பல்பொருள் சந்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சந்தையில் கல்லூரி மாணவிகளே 100 அரங்குகளை அமைத்து பல்வேறு விதமான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தனர் .
இதில் மாணவிகள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் விதமாக, அவர்கள் திறமைக்கேற்ற பொருட்களை விற்பனை செய்தனர். சிலர் சாண்ட்விச் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் , நவநாகரிக ஆடைகள்,மற்றும் சிறு தானியங்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களை இந்த சந்தையில் கல்லூரி மாணவிகள் விற்பனை செய்தனர்.
இந்த சந்தையில் மணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என வெளியில் இருந்து பல்வேறு தரப்பினர் வருகை புரிந்து தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி சென்றனர். மாணவிகளின் சந்தைக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. மாணவிகளின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 9 ஆண்டுகளாக இந்த பஸார் எனப்படும் பல்பொருள் சந்தைக்கு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் ஏற்கனவே இந்த கல்லூரியில் படித்து முடித்த மாணவிகளும் ஆண்டுதோறும் நடக்கின்ற இந்த சந்தை நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து தங்களது விற்பனைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
படிக்கும்போதே மாணவிகள் வியாபாரங்களை கற்றுக் கொள்வதற்கு இந்த சந்தை நிகழ்வு தங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.