தேர்வில் முட்டை வாங்கிய பெண்ணை பாராட்டிய சுந்தர் பிச்சை…

பொதுவாக நம் வீடுகளில் தேர்வில் சரியாக ஒரு குழந்தை படிக்கவில்லை என்றால் நீ ஒன்றுக்கும் உதவ மாட்டாய், உன்னை வைத்துக்கொண்டு என்ன செய்வது என பெற்றோர்கள் தங்கள் கவலைகளை பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் புலம்புவார்கள் .ஆனால் படிப்பு மட்டுமே ஒரு குழந்தையின் வாழ்க்கையை முடிவு செய்யாது என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை .

 அதேபோல், இங்கே ஒரு பெண் தன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கியதை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த கூகுள் CEO சுந்தர் பிச்சை அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில் ‘4 வருடத்திற்கு முன்பு physics தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தேன்.அதனை அறிந்த எனது ஆசிரியர் என்னுடைய major subject-ஐ மாற்ற நினைத்தார்.தற்போது என்னுடைய துறையை Astro physics என மாற்றி அதில் சிறந்து விளங்குகிறேன்.மேலும் ’தேர்வில் மதிப்பெண் வாங்குவது உங்களின் திறனுக்கான மதிப்பீடு அல்ல’ என்றும் மாணவி பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த சுந்தர் பிச்சை,அந்த மாணவியின் பதிவை ரீட்வீட் செய்து ’நன்றாக சொன்னீர்கள், மிகவும் ஊக்கம் அளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.சுந்தர் பிச்சையின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மாணவிக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணமே உள்ளது. இந்த மாணவியின் பதிவுக்கு அதிக லைக்குகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version