ஒட்டன்சத்திரத்தில் பனை நுங்கு விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கோடை வெயிலை சமாளிக்க பனை நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது. முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த இந்த பனை நுங்கை சாப்பிடுவதால் நோய்கள் குணமடையும் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகமாக வாங்கிச்செல்கின்றனர். அதிகளவில் பனை நுங்கு விற்பனையாவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாகையில் கோடைக்கு குளிர்ச்சி தரும் பனை நுங்கு விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் சாலை ஓரங்களில் பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இளம் காய் வெட்டப்பட்டு அதிலிருந்து நுங்கு பிரித்து எடுத்து விற்கப்படுகிறது. தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்கள் தாகத்தை தனிக்கும் விதமாக பனை நுங்கினை வாங்கி செல்கின்றனர். பனை நுங்கு பலவிதமான சரும நோய்களை குணமாக்குவதோடு, உடல் சூட்டை தணிக்கும் மருந்தாகவும் விளங்குவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Discussion about this post