நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் வசதிக்காக இன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதையடுத்து, சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. உதகை வரும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருவது இங்கு இயக்கப்படும் மலைரயில். இதுவரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட்டு வந்த மலைரயில், சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பையொட்டி, இன்றுமுதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் இந்த ரயில், கேத்தி வழியாக மாலை 4.30 மணிக்கு உதகை சென்றடையும். ஞாயிற்றுக்கிழமை உதகையிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில், காலை 11 மணிக்கு மீண்டும் உதகை வந்தடையும். ஒரேநேரத்தில் 132 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளை கவரும்வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Discussion about this post