கத்திரி வெயில் கொளுத்தி வரும்நிலையில், தமிழகத்தின் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹிட்டுக்கும் அதிகமாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக திருத்தணி மற்றும் வேலூரில் 108 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை நிலவியது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையோ, இடி மின்னலுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Discussion about this post