இந்தியாவின் நாற்பதாவது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜி-சாட் 31, பிரான்சின் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜி-சாட் 31 செயற்கைகோள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.31 மணிக்கு ஏரியான் விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனுடன் சவுதி அரேபியாவின் செயற்கைகோளும் பயணித்தது. 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட ஜி-சாட்31 செயற்கைகோளின் ஆயுள்காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதுவரை தகவல் தொடர்பில் பெரும் பங்கு வகித்து வந்த இன்சாட் -4ஏ மற்றும் இன்சாட் 4சி.ஆருக்கு மாற்றாக இந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டுள்ளது. ஜிசாட்-31 செயற்கைகோள் செல்போன் சேவை, டி.டி.ஹெச், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றிற்கு உதவும். மேலும் இந்தியாவின் தீவுப் பகுதிகள் மற்றும் மத்திய பகுதிகளை கண்காணிக்கும்.
Discussion about this post