வழக்கமான ஃபார்முலாவை வைத்து எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸானலும் எப்போதும் புதுசா எதாவது பண்ணனும்னு முயற்சி பன்ற இயக்குநர்கள் எடுக்கிற திரைப்படங்கள் வெற்றியும் அடையும் தோல்வியும் அடையும். 2019ல் புது முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடைந்த திரைப்படங்களை பார்க்கலாம்.
பேரன்பு
ராம் இயக்கத்தில் வெளிவந்த பேரன்பு திரைப்படம் முக்கியமான திரைப்படமா அமைந்தது. மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், வளரும் போது அவ என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள்… அந்த பெண்ண சிங்கிள் பேரண்ட்டா பாத்துக்குற அப்பாவுக்கு அது எவ்வளவு மன வேதனையை கொடுக்குதுன்னு ரொம்ப கனத்தோட பதிவு செஞ்சிருந்தாரு இயக்குநர் ராம்.
டூலெட்
டூலெட் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில ரிலீஸாகி விமர்சன ரீதியா நல்ல வரவேற்ப பெற்றுது. திரைத்துறையில சாதிக்கனும்னு நினைக்கிற நிரந்தர வருமானம் இல்லாத ஒரு இளைஞர். அவர் சென்னை மாநகரத்துல தீப்பெட்டி மாதிரியான வீட்டுல குடியிருக்கும்போது வீடு காலி பண்ண வேண்டிய சூழல் ஏற்படுது. வேற வீடு தேடி அலையும்போது ஏற்படுற சிக்கல், சென்னை மாதிரியான பெரு நகரங்களுக்கு சாமான்ய மனிதன் மேல இருக்கிற பார்வை. அவர் குடியிருக்கிற அந்த வீட்டுக்குள்ள நடக்குற உணர்ச்சிப் போராட்டம், உலகமயமாக்கல், அரசியல்னு பல்வேற் விஷயங்கள ரொம்ப யதார்த்தமா காட்சிப்படுத்தியிருந்தாரு இயக்குநர் செழியன். சர்வதேச அளவுல பல விருதுகளை வாங்குன இந்த படம் விமர்சன ரீதியா நல்ல வரவேற்பை பெற்றுது.
90 எம்.எல்
பிக்பாஸ் வீட்டுக்குள்ள ரொம்ப எதார்த்தமா நடந்துகொண்டதை பார்த்து நடிகை ஓவியாவுக்கு ஆர்மி ஆரம்பிச்ச ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்குற திரைப்படமா 90எம்.எல் ரிலீஸாச்சு. அடல்ட் காமெடி திரைப்படமா எடுக்கப்பட்டிருந்த இந்த படம் சுதந்திரமா தங்களுக்கான வாழ்க்கையை வாழுற ஐந்து இளம் பெண்கள் பத்தி எடுக்கப்பட்டிருந்துது. அனிதா உதீப் இயக்கியிருந்த இந்த படம் தமிழ்ச்சமூகத்துக்கு புதுசா இருந்ததுனால எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
சூப்பர் டீலக்ஸ்
ஆரண்ய காண்டம் திரைப்படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்துல சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரிலீஸாச்சு. தியாகராஜன் குமாரராஜா, மிஷ்க்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் திரைக்கதை எழுதியிருந்த இந்த படம் விவாதப் பொருளா மாறியது. இருந்தாலும் திருநங்கை கதாபாத்திரத்துல நடிச்சிருந்த விஜய் சேதுபதி மட்டுமில்லாம, ஃபகத் ஃபாஸில்,சமந்தா, காயத்ரின்னு எல்லாருக்குமே பாராட்டுக்கள் குவிந்தன.
தடம்
மகிழ் திருமேனி இயக்கத்தில் ரிலீஸான தடம் திரைப்படம் முக்கியமான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமா அமைந்தது. இரட்டை வேடத்தில் நடிக்கின்ற படத்தில் என்ன பெருசா இருக்கப் போகிறது என்று வந்த ரசிகர்களுக்கு பல ஆச்சர்யங்களை கொடுக்கிற படமா தடம் திரைப்படம் அமைந்தது. ஒரே மாதிரி இருக்கிற ரெண்டுபேர். அதுல ஒருவர் ஒரு கொலை வழக்கில் கைதாக , விசாரணை நடந்துகின்ற நேரத்தில் இன்னொருத்தரும் ஆஜராகி போலீஸுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தோட கதை. அருண் விஜய்யோட நடிப்பு, மகிழ்திருமேனியோட லாவகமான திரைக்கதை படத்துக்கு மிகப்பெரிய பலமா அமைந்திருந்தது.
மான்ஸ்டர்
ஒரு எலியால இவ்ளோ பிரச்சனை வருமான்னு யோசிக்கிற அளவுக்கு மான்ஸ்டர் திரைப்படம் வெளியானது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்த இந்த படத்தில் எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத அழகியப்பிள்ளையாக எஸ்ஜே.சூர்யா நடிச்சியிருப்பாரு. ரொம்ப டீசண்ட்டான படமா ரிலீஸான இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேர்பு கிடைத்தது.
கேம் ஓவர்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்ல தாப்ஸி நடிச்ச கேம் ஓவர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிடைந்தது. ஒரு வீடியோ கேம் வடிவமைப்பாளர் கையில போட்டிருக்கும் டாட்டு அவருக்கு கை வலிய ஏற்படுத்துகிறது. இறந்துபோன ஒரு பெண்ணோட அஸ்திய வச்சு வரையப்பட டாட்டுன்னு தெரியவந்ததும் அத நீக்க முயற்சிக்கும்போது டாப்ஸியக் கொல்ல சைக்கோ கொலைகாரர்கள் கிட்டேருந்து அவங்க தப்பிக்கிற காட்சிகள் பயங்கற த்ரில்லிங் அனுபவத்தோட இந்த படம் அமைஞ்சிருந்துது.
ஜீவி
க்ரைம் த்ரில்லர் திரைப்படமா எடுக்கப்பட்டிருந்த ஜிவி திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்பியல் தத்துவத்தை அடிப்படையா வச்சு எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தோட திரைக்கதை இப்படியெல்லாம் யோசிக்க முடியாமான்னு பலரையும் கேக்க வச்சுது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிற கதாநாயகன் திட்டம் போட்டு ஒரு வீட்டில் நகையை திருடி, அதை அங்கேயே திருப்பி வச்சிடலாம்னு நினைக்குறாரு. அதுக்குப் பிறகு என்ன நடக்குதுங்குறதுதான் படத்தோட கதை. பெரிய அளவுல விளம்பரம் இல்லாமல் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.
ஒத்த செருப்பு
படம் முழுக்க ஒரே கதாபாத்திரம் இதுவரை தமிழ் சினிமா முயற்சிக்காத ஒரு ஐடியாவை பார்த்திபன் யோசிச்சு ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்த எடுத்திருந்தார். பார்த்திபன் தயாரித்து இயக்கி நடிச்சிருந்த இந்த படம் ஒரு காவல் நிலையத்தோட விசாராணை உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் நடப்பதை கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய பேச்சல் தனக்கு என்ன நடக்கிறது , தன்னை சுத்தி என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு கடத்தி வெற்றிபெற்றார் பார்த்திபன்.
ஆடை
ஆடை இல்லாம நிர்வாணமா ஒரு பெண்ணால இருக்க முடியுமா? ஒரு பெண்ணுக்கு ஆடை என்பது எவ்வளவு முக்கியம் என்கிற கருத்தை விவாதப்பொருளா வச்சு அமலா பால் நடிச்ச ஆடை திரைப்படம் எடுக்கப்பட்டிருந்துது. ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரா இருக்கும் அமலா பாலுக்கு பந்தயம் கட்டி கேம் விளையாடுறது ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் குடிபோதையில் இரவு முழுவதும் அவரோட அலுவலகக் கட்டிடத்துக்குள் நிர்வாணமாக இருக்க முடிவு செய்யுற அமலா பாலுக்கு என்ன நடக்கிறது என்பது படத்தோட கதை. இப்படி ஒரு முயற்சியை தைரியமாக எடுத்ததுக்காகவும் எந்த இடத்திலேயும் ஆபாசம் இல்லாமல் இருந்ததுக்காகவும் அமலா பாலுக்கும் இயக்குநர் ரத்னகுமாருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.
கைதி
ஒரே இரவில் நடக்கும் கதை, படத்தில் ஹீரோயின் கிடையாது என அதிரடியா கைதி திரைப்படத்த ரிலீஸ் பண்ணாரு லோகேஷ் கனகராஜ். கார்த்தி, நரேன் ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடிச்சிருந்த இந்த படம் திரைக்கதைக்காகவே மிகப்பெரிய வெற்றியடைந்தது. போலீஸ் அதிகாரிகளை போதைப் பொருள் கடத்தல் கும்பல்லிடம் சிக்க விடாமல் ஒரு லாரியில் கூட்டிட்டு போயி கார்த்தி எப்படிகத்துகிறார் என்பது தான் படத்தோட கதை. லாரி வேகமா போற அதே நேரத்துல அப்பா பொண் பாசம், போலீஸ் உயர் அதிகாரி நரேனுக்கும் கார்த்திக்கும் நடக்கின்ற வார்த்தை மோதல், கமிஷனர் ஆபீஸ்குள் மாட்டிக்கிற கல்லூரி மாணவர்கள், அவங்கள வச்சு அந்த கட்டிடத்துக்குள் வில்லன்களை வரவிடாமல் தடுப்பது. ஜார்ஜ் மரியான், கொடூர வில்லனா வரும் அர்ஜுன் தாஸ்ன்னு படத்துல பல விஷயங்கள் சிறப்பா அமைந்திருந்து.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் இந்த ஆண்டு வெளியான புதுமையான கதைகளில் முக்கியமானப் படம். அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியிருந்த இந்த படம் உலக அரசியல்லேருந்து உள்ளூர்ரில் நடக்கின்ற ஆணவக்கொலை வரை பல விஷயங்களை காட்சிப்படுத்தியிருந்து. இரண்டாம் உலகப்போரை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் இப்படி ஒரு கதை தமிழில் இதுதான் முதல் முறை.
Discussion about this post