சுற்றுசூழல் நீறி அமைப்பு அறிமுக படுத்திய பசுமைப்பட்டாசு, சோதனையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பசுமை பட்டாசுக்கான லோகோ வெளியிடப்பட்டது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் மாசு அடைவதாக கருதி, உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை கோரி, பொதுநல வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடரப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான, இவ்வழக்கின் தீர்ப்பில், பட்டாசு தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளான பேரியம் பயன்படுத்த கூடாது, இனி தயாரிக்கக் கூடிய பட்டாசுகள் அனைத்தும் பசுமைப்பட்டாசாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளை மூடி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். தற்போது தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சாதனா ராயலு தலைமையிலான குழு, பசுமை பட்டாசு என்பதைக் கண்டறிய சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர். அதில், பேரியம் மூலப்பொருள் இல்லாமல் புதிய மூலப்பொருள்களை கொண்டு பட்டாசுகளை தயாரித்து சோதனை செய்ததில், வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து, தற்போது பேரியம் பயன்படுத்தமால் தயாரிக்க கூடிய பட்டாசு ரகங்கள் தயாரிப்பு பணியில், பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல நிறுவனங்கள் ஒப்பந்தங்களை செய்துள்ளன.
நீரி அமைப்பினர் அறிமுக படுத்தியுள்ள புதிய வேதிப்பொருளை, பேரியம் மூலப்பொருளுக்கு மாற்றாக பயன்படுத்தும் போது, 30% மாசு குறையும் என, விஞ்ஞானி டாக்டர் சாதனா ராயலு கூறுகிறார்.
பசுமைப்பட்டாசின் ஆய்வு வெற்றியைத் தொடர்ந்து, பேரியம் மூலப்பொருளுக்கு மாற்றாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பசுமைப்பட்டாசு என்பதை குறிக்கும் லோகோவையும் வெளிட்டனர். இவை ஒவ்வொன்றும் பட்டாசுகளில் இடம் பெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வெற்றி, பட்டாசு தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், இனி கட்டுப்பாடுகள் இன்றி பட்டாசு வெடித்து மகிழலாம் என்பதால், மக்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு தகவல் என்பதில் சந்தேகமில்லை.
Discussion about this post