சபரிமலையில் இரண்டு இளம் பெண்கள் வழிபாடு நடத்தியதற்கு சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் வரவேற்பு தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். இதனால், கேரளாவில் பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு இளம் பெண்கள் சபரிமலையில் வழிபாடு நடத்தியுள்ளதற்கு, சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவென கூறியுள்ள திருப்தி தேசாய், சமத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Discussion about this post