முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததை அடுத்து, அணையை கண்காணிக்க மூவர் குழு அமைக்கப்பட்டது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு பின் தேக்கடி வந்த மத்திய நிர்வாக ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணைக் குழுவினர், படகு மூலமாக முல்லைப் பெரியாறு அணைப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அணையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மதகுகளின் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
Discussion about this post