நாம் எங்கு சென்றாலும், என்ன சாப்பிட்டாலும் முதலில் இணையத்தில் தான் பதிவிடுகிறோம்.அது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.சிறு வயதில் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள்.ஆனால் 91 வயதான பாட்டி தனது fashion ஆன உடைகள் மூலம் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த ’ஹெலன் ரூத் எலம்’ என்பவருக்கு வயது 91.இவர் தனது 85 வயதில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த ஸ்டைலிஷான போட்டோ மூலம் அனைவரிடமும் பிரபலமானார்.
பின்பு தனது fashion ஆன உடைகள் மற்றும் தனது attitude மூலம் இணையத்தை கலக்கி வருகிறார்.இவருக்கு பிடித்த நிறம் பிங்க் என்பதால் இவர் பதிவிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் பிங்க் நிறத்திலேயே உள்ளது.தனக்கு பிடித்ததை செய்வதற்கு வயது தடையில்லை என்று ஹெலன் நிரூபித்து வருகிறார்.
மேலும் ’இவர் baddiewinkle’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கினை பயன்படுத்தி வருகிறார்.அதில் இவருக்கு ஹீரோயின்களுக்கு இணையாக 3 மில்லயன் பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post