திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக சோதனை செய்தனர். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் உள்ள உலோகத் திருமேனி பாதுகாப்பு மையத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 625 கோயில்களுக்கு சொந்தமான, 4 ஆயிரத்து 359 சிலைகள் உள்ளன. இங்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரும், மத்திய தொல்லியல்துறையினரும், சிலையின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த சோதனையில் 5 சிலைகள் போலி என கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 4 நாட்கள் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post