பருவத் தேர்வில் தோல்வியடைந்து, மறுதேர்வுக்காக கட்டணம் செலுத்திய மாணவர்கள் பயப்பட வேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விகவுன்சில் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து, ஏ.ஐ.சி.டி.இ-க்கு மின்னஞ்சல் அனுப்பப்படவில்லை என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அமைச்சர் அன்பழகன் குறிப்பிட்டார்.
தேர்வு எழுதும் எண்ணம் மாணவர்களுக்கு இருந்த காரணத்தால், மறுதேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனால், தோல்வியடைந்த பாடங்களுக்கான மறுதேர்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் பயப்பட வேண்டாம் என அமைச்சர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post