நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், பள்ளி மாணவர்கள் இடையே மோதலை தவிர்க்க, காவல்துறையினர் திருக்குறளை எழுதப் பணித்தது, பெற்றோர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே, கயிறு கட்டுதல் தொடர்பாக சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்தது. இதை தவிர்க்க பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள் சிலர் பிரச்னையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நெல்லை காவல் ஆணையர் அறிவுறுத்தலின்படி, ஆய்வாளர் நாகராஜன் மாணவர்களை அழைத்து நூதன தண்டனை வழங்கினார். அவர்களை கண்டிக்கும் வகையிலும், அறிவுறுத்தும் வகையிலும், ஆயிரத்து 330 திருக்குறளையும் எழுதச் செய்தார். காவல்துறையின் இந்த நடவடிக்கை பெற்றோர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post