கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஓட்டப்பந்தயத்தில் சர்வதேச அளவிலான போட்டிகளில் தேர்வாகி உள்ளார். அரசு உதவிக்கரம் நீட்டினால் தான் சாதனை படைப்பேன் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நித்திரவிளையை சேர்ந்த சர்ஜின் என்பவரின் மகள், லிபோனா ரோஸ்லின் ஜின். மாநில அளவில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட 10 பதக்கங்களும் தேசிய அளவில் 4 பதக்கங்களும் பெற்றுள்ளார். இந்நிலையில், சர்வதேச அளவில் துபாயில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க இவர் தேர்வாகியுள்ளார்.
கூலித் தொழிலாளியின் மகளான இவர், குடும்ப சூழல் காரணமாக தன்னால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள ரோஸ்லின், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் அமைப்புகள் உதவிக்கரம் நீட்டினால் தான் நிச்சயம் சாதனை படைப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Discussion about this post