வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் அரசு கலந்தாய்வின் மூலம் சேர, 25 சதவீத இடஒதுக்கீட்டை, அதற்கான பள்ளிகள் இயக்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வரும் 29, 30 ஆகிய தேதிகளில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் சார்பில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில், ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி, வரும் 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், அனைவருக்கும் சேர்க்கையை உறுதி செய்யவும், அதிகமாக வந்திருந்தால் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post