ஈக்குவடார் நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கையை கண்டித்து அதிபர் லெனின் மொரீனோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈக்குவடார் நாட்டில் புதிய பொருளாதார கொள்கையை அந்நாட்டு அதிபர் லெனின் மொரீனோ அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், பொதுமக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்காக தலைநகர் குயிட்டோவின் சாலைகளில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீப்பந்தங்களை கொளுத்தியும், அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் தலைநகர் மட்டுமல்லாது, நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து 3 வது நாளாக போராட்டம் வலுவடைந்து வருவதால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post