வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமையவே அதிமுக மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சதன் பிரபாகரன் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பார்த்திபனூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் அதிமுக வளர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்காகவே மக்களை தேடி தான் வந்துள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post