நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்களிக்க 170 மையங்களில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நாங்குநேரி தொகுதியில் 95 சதவீத வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ஆயிரத்து 460 தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 146 வாக்குசாவடிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post