இரவு நேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில், காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்களை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பங்கேற்று, ஆயிரத்து 382 பேரிடம் செல்போன்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரவு ஊரடங்கில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும், 200 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
Discussion about this post