வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை புயலாக வலுப்பெறவுள்ளதால் 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெற்று நாளை மாலை அல்லது இரவு, கன்னியாகுமரி கடற்கரைக்கு நகரக்கூடும் என தெரிவித்தார்.
இதனால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதீத கனமழைக்கும், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரித்தார்.
Discussion about this post