ஜப்பான் நாட்டிற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் மேற்கு பகுதியில் உருவான க்ரோசா என்ற புயல், நேற்று வடகிழக்கு நோக்கி மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. பலத்த காற்றுடன் ஒரே நாளில் மட்டும் சுமார் ஆயிரம் மில்லி மீட்டர் மழை பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 லட்சத்து 46 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் உள்ளூர் ரயில் சேவை மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை காரணமாக 679 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.