கோஷ்டி மோதலை நாடாளுமன்ற தேர்தல் வரை நிறுத்தி வையுங்கள் என்றும் அதற்கு பின்னர் தானே மோதலை தொடங்கி வைப்பதாகவும் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில்
திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை அறிமுகம் செய்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கட்சிக்காக கோஷ்டி பூசல் இல்லாமல் உண்மையாகவே உழைக்க வேண்டும், தேர்தல் முடிந்து நானே வந்து சண்டையை மீண்டும் தொடங்கி வைக்கிறேன் என பேசினார். திமுகவில் கோஷ்டி அரசியல் இருப்பதை, அக்கட்சியின் பொருளாளர் வெளிப்படையாகவே பொது வெளியில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சிறிது சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post