உலகம் முழுவதும் மலேரியா தினமாக அனுசரிக்கப்படும் இன்றைய தினத்தில் பலரது வாழ்வை வழிமாற செய்த கொடிய நோயான மலேரியா பற்றிய சிறிய தொகுப்பினை இனி காணலாம்…
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பார்கள். அப்படி நோய் நொடி இல்லாமல் வாழ்பவர்களை அதிசயமாக பார்க்கும் நிலையில்தான் இன்றைய சூழல் உள்ளது. “தடுப்போம் மலேரியாவை சிறப்பாக” என்ற உலக சுகாதார அமைப்பின் வாசகம் மீண்டுமொருமுறை நமக்கு இன்றைய நாள் உலக மலேரியா நாள் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே உள்ளது. மலேரியா காய்ச்சல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் நாள் உலக மலேரியா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மலேரியாவை கட்டுப்படுத்தவும், தடுக்கவும், அதற்கான உரிய சிகிச்சை அளிக்கவும் ஆப்பிரிக்கா அரசால் 2001இல் முன்னெடுக்கப்பட்டு, முதன் முதலாக ஆப்பிரிக்க மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.பின்பு 2007ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இத்தினத்தை உலக மலேரியா தினமாக அறிவித்தது. ப்ரொட்டோசோவா என்ற கிருமியால் உருவாகின்ற மலேரியாவால் உலக அளவில் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கொசுக்கள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த தீய தொற்று நோய் அமெரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகமாக பரவியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி உலகில் மலேரியாவால் ஒரு ஒரு நிமிடத்திற்கும் 1 குழந்தை இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் ஏறத்தாழ 80 சதவீதம் பேர் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்பது மிகுந்த மன உளைச்சலை தரக் கூடியது. இதனை தடுக்க உலக சுகாதார அமைப்பு இன்றளவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவது குறிப்பிடத்தகுந்தது.
மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் சுகாதாரம் பெரிய சவாலாக இருப்பினும் இந்திய அரசும் , தமிழக அரசும் மலேரியாவை கட்டுப்படுத்துவதில் முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுகாதார துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசும் சுகாதாரத் துறைகேன நிதி ஒதுக்கி மலேரியாவை தடுத்து நிறுத்தவதில் தீவிரமாகவே இருந்து வருகிறது.
பொதுமக்கள் கவனத்திற்கு என்று சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு மலேரியா தாக்கப்பட்டால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு செல்வதுதான். காரணம் அரசு மருத்துவமனையில் மலேரியா என்னும் இந்த கொடிய நோய்க்கு சரியான நேரத்தில் உரித்தான சிகிச்சை அளிக்கப்படுவது நம்மில் பல பேர் அறிந்ததே…
உங்களது இல்லங்களில் டயர், பிளாஸ்டிக் பைகள், பழைய உரல், என தண்ணீர் தேங்கும் இடங்களை கண்காணித்து அவற்றை அப்புறப்படுத்துவதில் முனைப்புடன் இருங்கள்.. காரணம் அவைதான் மலேரியாவின் முதல் நண்பன்… நமக்கு முதல் எதிரியும் கூட… சமூகத்தில் மனிதன் வாழ்வதற்கு நீர் அருந்துவது முக்கியம் என்றால் மலேரியா இல்லாமல் நலமுடன் வாழ அந்த நீரை காய்ச்சி குடிப்பது அதனினும் முக்கியம்..
மீண்டும் ஒரு முறை சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்… தடுப்போம் மலேரியாவை சிறப்பாக…!
Discussion about this post