கொரோனா பாதிப்பு எதிரொலியாக பங்கு வர்த்தகம் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. உலகில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் கொரோனா உலகளவில் வர்த்தகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். வாரத்தின் முதல்நாளான இன்று, மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ், ஆயிரத்து 851 புள்ளிகள் சந்தித்து 32 ஆயிரத்து 252 ஆக இருந்தது. இதேபோன்று தேசிய வங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 524 புள்ளிகள் சரிந்து 9 ஆயிரத்து 430 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 42 பைசா வீழ்ச்சியடைந்து 74 ரூபாய் 17 பைசாவாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை, மத்திய அரசு பேரிடராக அறிவித்துள்ளதும், அமெரிக்காவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருப்பதும் வர்த்தக பாதிப்புக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post