ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகனங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் ஊரடங்கை மீறுபவர்களைக் கண்காணிக்க தீவிர வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் அரசு மற்றும் வங்கி அலுவலர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் இத்தகைய வாகனங்களை தேவையின்றி நிறுத்தி சோதனை செய்வது குறைவதுடன், காவல்துறையினருக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயமும் குறையும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Discussion about this post