ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வரும் 24ஆம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வேதாந்தா குழுமம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் தேதி மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை ஜனவரி முதல் வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் தொடர்பாக வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post