தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற அறிக்கையை ஏற்று கொள்வது தமிழக அரசின் விருப்பம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் நிலத்தடி நீர்வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடியின் நிலத்தடி மாசிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் என்ற மத்திய அரசின் அறிக்கையை ஏற்பதும், ஏற்றுக் கொள்ளாததும், தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான இந்த வழக்கை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்று வாதிடப்பட்ட நிலையில், விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post