தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளால், மீன் சந்தைகள், இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில், மீன்களை வாங்க பொதுமக்கள் பாதுகாப்பான இடைவெளியின்றி கூடினர்.
பொதுமக்களில் பலர் முகக் கவசம் அணியாமல் வந்திருந்தனர்.
பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க ஒலிபெருக்கி மூலம் பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொண்டனர்.
இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதே போல், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில், அசைவப் பிரியர்கள் அதிகளவில் கூடினர்.
தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும், அலட்சியமாக நடந்து கொண்டனர்.
இந்த நிலையில், மீன் மார்க்கெட்டில் கூட்டத்தை கட்டுப்படுத்த மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூரில் துறைமுகம் மீன்பிடி சந்தையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடைவெளியின்றி கூடினர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காமல், மீன்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டினர்.
இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
மாவட்ட நிர்வாகம் இதனை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Discussion about this post