தமிழகத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலையை அடைய முனைப்பான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.மதுரையில், கொரோனா பாதிப்பு தொடர்பான ஆலோசனை மையம் திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, அதிக பரிசோதனை மேற்கொண்டு, தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்தார்.
Discussion about this post