திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 3-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சோதனை

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் மூன்றாவது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் சார்பில் திருவாரூர் தியாகராஜசாமி திருக்கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், அறியலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 625 கோயில்களுக்கு சொந்தமான 4359 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் நான்கு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து ஐந்தாவது கட்டமாக ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற ஆய்வில் 2400 க்கும் மேற்பட்ட சிலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

Exit mobile version