தமிழகத்தில் ஆய்வு செய்யப்பட்ட சிலைகள் குறித்த ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், தொல்லியல் துறையினர் சார்பில் தமிழக கோயில்களில் உள்ள சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 625 கோயில்களுக்கு சொந்தமான 4 ஆயிரத்து 375 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல், மத்திய தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் ஆகியோர் தலைமையில் இரண்டு கட்ட ஆய்வுகள் நிறைவு பெற்று, 3வது கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன், ஆயித்திற்கும் மேற்பட்ட சிலைகளின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த ஆய்வின் முடிவுகள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post