சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் 700 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில், மாநில அளவிலான பாரா தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. மதுரை, திண்டுக்கல், கோவை, சேலம் உட்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது.
மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இறுதி போட்டிகள் வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
Discussion about this post