ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாணவிகளின் சங்கடத்தை தீர்க்க, அரசு மேல்நிலைப் பள்ளியில் நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகளின் நலனுக்காக சுகாதாரத்துறையின் மூலம் ஆண்டுதோறும் நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பயன்படுத்திய பின் சுகாதார நலன் கருதி அழிப்பதற்கான சாதனங்கள் பள்ளியில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா தானியங்கி சானிடரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை பெற்று, கழிப்பறையில் ஆசிரியர்கள் பொருத்தி உள்ளனர். மாணவிகளின் சங்கடத்தை போக்கும் வகையில் நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் பொருத்தப்பட்டதற்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post