ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி முதல் கோவா வரை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் திசை
மாறுபாடு காரணமாக தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் தென்காசி மற்றும் ராமேஸ்வரத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post