சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச மகளிர் தின விழா நாமக்கல்லில் நடைபெற்றது.
விழாவை தொடங்கி வைத்த சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் சரோஜா பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற திட்டத்திற்கான விழிப்புணர்வு பதிவேடுகளை வெளியிட்டார். விழாவில் 16 இனிய பழக்கங்கள் என்ற தலைப்பில் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து மகளிர் தின விழா போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பின், சமூக நலத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் பேசிய அமைச்சர் சரோஜா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 13 அம்ச திட்டங்களை நிறைவேற்றியதால் தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக கூறினார்.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் சுந்தரம், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளாமான பொது மக்களும் கலந்து கொண்டனர் .
Discussion about this post