தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த அதிமுகவைச் சேர்ந்த முகமதுஜான் மறைவைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி, அந்த இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என்றும், வேட்பு மனுக்கள் மீது செப்டம்பர் 1ம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 3ம் தேதி கடைசிநாள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Discussion about this post