உள்ளாட்சித் தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படை தன்மையோடும் நடத்த ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள அதிகாரிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாவட்டத் தேர்தல் அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கூட்டங்களை நடத்தி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வாக்குச் சாவடி மையங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post