மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கை திட்டத்தில், மாநில அரசின் உரிமைகள் பாதிக்காது என்று முன்னாள் குடியரசுத் தலைவரின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் வரும் 27-ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மழலையர்கள் மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட பொன்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்வித் திட்டத்தில் அப்துல் கலாம் கொடுத்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post