தமிழகத்தில் நேற்று,11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வாட்டி வதைத்தது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட்டும், சேலம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் நெல்லையில் 104 டிகிரி பாரன்ஹீட்டும், நாகை, மற்றும் கடலூரில் 103 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post