நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்ற அரசு பேருந்து, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்றது.
தொடர் மழையால், நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே நிலச்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை குன்னூர் மலைப்பாதையில் 25 பயணிகளுடன் உதகை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பனி மூட்டம் நிலவியதால், எதிரே வரும் லாரிக்கு வழி கொடுக்க நினைத்த ஓட்டுனர், பேருந்தை இடது புறம் ஓரமாக இயக்கினார்.
அப்போது மண்சரிவு ஏற்பட்டு 30 அடி பள்ளத்தை நோக்கி பேருந்து சென்றது. சாதூர்யமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர், பேருந்தை நிறுத்தியதால், 30 அடி பள்ளத்தின் விளம்பில் சென்று பேருந்து நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
Discussion about this post