2029-ம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உயரும் என பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் பொருளாதார அளவில் பெரும் மாறுதல்களை சந்தித்து வரும் இந்தியா, பொருளாதார உயர்வில் தற்போது உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 13.5 சதவீதமாக உள்ளது. இதே வேகத்தில் வளர்ச்சி இருக்கும்பட்சத்தில், வரும் 2029-ஆம் ஆண்டிற்குள்ளாக ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை முந்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.