எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. இரண்டாவது நாளாக மக்களவை, மாநிலங்களவை இன்று கூடியது. மாநிலங்களவை தொடங்கியதும், பாதுகாப்பு காவலர்களின் சீருடை மாற்றப்பட்டதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு காவலர்களின் சீருடை மீண்டும் பழைய முறைக்கு மாற்ற வேண்டும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு மாநிலங்களவை செயலாளரை கேட்டுக்கொண்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். பின்னர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்னை குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டனர். இதற்கு மாநிலங்களவை தலைவர் அனுமதி மறுத்ததால், அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post