மாயாற்றில் வெள்ளம் வடிந்ததால் தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது.
நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கிராமத்தின் அருகில் ஓடும் மாயாற்றை கடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில் கடந்த வாரம் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மாயாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பரிசல் இயக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இதன் காரணமாக தெங்குமரஹாடா கிராம மக்கள் போக்குவரத்தின்றி அவதிக்குள்ளாகினார்.
கடந்த இரண்டு நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மாயாற்றில் வெள்ளம் வடிந்து தற்போது குறைந்த அளவு நீர் ஓடுகிறது. இதனால் மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது.
Discussion about this post